கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 09 பேர் குணமடைந்தனர்...!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் குணமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 09 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என 106 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் தற்போது 09 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலையில் 5 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 199 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments