யாழில் மேலும் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட நாளில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனையின் பின்னர் வெளியேறியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியவர் என ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments