பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுலான கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 394 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் 3 முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments