6850 பேர் அதிரடியாக கைது

நாடு முழுவதும் அமுல் படுத்தபட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் என 1583 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 166 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: