19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு இன்று காலை (30) 6.00 மணிக்கு 19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இவ்வாறு ஊரடங்கு இன்று காலை தளர்த்தப்பட்டது.

இவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு  மீள பிறப்பிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

எனினும் கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு அறிவிப்பு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: