மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 72 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 72 பில்லியன் ரூபாய் நிதி ஓதுக்கப்பட்டுள்ளதுடன் ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து நிதியை ஒதுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறைசேரியின் செயலாளருக்கு அறிவித்துள்ளார். 

சிறு மற்றும் நடுத்தர நிர்மாணத்துறை ஒப்பந்தகாரர்களுக்கு நிலுவைத்தொகையை வழங்குவதற்காக 5 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிகளை முன்னெடுக்க 500 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நான்கு துறைகளுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை, ஆடை தொழிற்துறை, வெளிநாட்டு வேளை வாய்ப்பு மற்றும் சிறு கைத்தொழில் துறை சார்ந்தோர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வருமானத்தை இழந்துள்ளனர். 

குறித்த துறை சார்ந்தோர் பெற்றுள்ள கடனுக்கான தவணையை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதேவேளை, புதிய பொருளாதார பொதியை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Post a Comment

0 Comments