கொரோனா வைரஸினால் மற்றுமொருவர் உயிரிழப்பு - சற்றுமுன்னர் வெளியான தகவல்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த மற்றொரு நோயாளி உயிரிழந்துள்ளார்.

64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தற்போது இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் இதய நோயாளி மற்றும் நீண்டகால சுவாச பிரச்சினைகள் இருந்ததாகவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: