அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்ட பலர் அடையாளம் காணப்பட்டனர்

தென்மராட்சியின் பலபகுதிகளிலும் இருந்து கடந்த 15 ஆந்திகதி அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்ட பலர் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர். 

இதுவரை நாவற்குழி, கைதடி, மட்டுவில், கச்சாய் தெற்கு, சரசாலை, நுணாவில் மத்தி ஆகிய பகுதிகளில் உள்ளவர்களே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மத போதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த ஆராதனையில் கலந்துகொண்டவர்களை அடையாளம் கண்டு ஆரம்ப கட்ட பரிசோதனை செய்து அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனையவர்களையும் கண்டறிந்து பரிசோதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: