முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது நியூசிலாந்து..!!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்திற்குள் விளையாடிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது நியூசிலாந்து.


(சிபிசி தமிழ்- cbc tamil )  நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பீதியால் ரசிர்களுக்கு அனுமதி இன்றி பூட்டிய மைதானத்திற்குள் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது.

இன்று சிட்னியில் முதல் ஆட்டம் நடைபெற்றது. ரசிகர்கள் யாரும் இல்லாத  கேலரிகள் வெறிச்சோடி கிடந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் (67), ஆரோன் பிஞ்ச் (60), லபுஸ்சேன் (56) ஆகியோரின் அரைசதங்களால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்தது.

நியூசிலாந்து அணி சார்பில் இஷ் சோதி 3 விக்கெட்டும் பெர்குசன், சான்ட்னெர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.பின்னர் 259 ரன்கள்  அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் (40), விக்கெட் கீப்பர் டாம் லாதம் (38) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 41 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த நியூசிலாந்து 187 ரன்னில் சுருண்டது.

இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கேட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும் ஹசில்வுட் மற்றும் அடம் சாம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ரண்கள் அடித்ததுடன் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 2-வது போட்டி சிட்னியில் 15-ஆம் திகதி 3-வது மற்றும் கடைசி போட்டி ஹோபர்ட்டில் 20-ஆம் திகதி நடக்கிறது.

No comments: