கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண் பூரண குணமடைந்தார்

Sri Lankan coronavirus patient in Italy recovers
(CBC TAMIL - WORLD) - இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இலங்கைப் பெண் பூரண குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தற்போது வைத்தியசாலையை விட்டு இனறு வெளியேறியுள்ளதாக இத்தாலியில் உள்ள மிலான் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்து அதிக அளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் 12,462 பேர் இதுவரை கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 827 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இத்தாலியில் தனிமைப்படுத்துவதை நிராகரிக்கும் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு 21 வருட சிறைத் தண்டணை விதிப்பதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: