கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 227 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) மட்டும் புதிதாக 05 அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 45 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 3,506 பேர் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவர் முற்றாகக் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து இன்று வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

0 Comments