அனைத்து திரையரங்கங்களும் மூடுமாறு அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

(CBC TAMIL - சி.பி.சி.தமிழ்) - கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் அனைத்து திரையரங்கங்களும் மேலதிக அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என கலாச்சார விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இன்று முதல் அனைத்து திரையரங்கங்களும்  மூடப்படும் என்றும் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறும் அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிலவும் சுகாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அந்த்ய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: