கொரோனா வைரஸ் - இராணுவ சிப்பாய் உட்பட இருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதி

(CBC TAMIL -JAFFNA) - கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இவர்கள் ணனுமதிக்கப்பட்டதாகவும் இவர்களில் ஒருவர் வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: