துணிந்து நடிப்பவர்கள் ரஜினி, அஜித் தான்- பிரபல நடிகர் அதிரடி பதில்

நேர்காணல் ஒன்றில் பிரபல காமெடி நடிகர் விவேக் தமிழ் திரையுலகில் துணிந்து நடப்பவர்கள் ரஜனி மற்றும் அஜித் என தெரிவித்துள்ளார். 


(சிபிசி தமிழ்- cbc tamil ) தமிழ் திரையுலகின் தனது கடின உழைப்பினால் மட்டுமே நுழைந்த நடிகர்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்தும் கண்டிப்பாக இருப்பார்கள். இவர்கள் இருவருமே தற்போது தங்களுது படங்களின் வேலைகளில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்கள்.

ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்திலும், தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்திலும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் பற்றி பலரும் தங்களது கருத்துக்களை பல பேட்டிகளில் கூறி வருவது ஒன்றும் புதிதல்ல.

அந்த வகையில் தற்போது இவர்கள் இருவருடனும் இணைந்து பணிபுரிந்த நடிகர் விவேக் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் நடிகர் விவேக் அவர்களை பார்த்து "வெள்ளை பூக்கள் படத்தில் நீங்கள் கொஞ்சம் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தீர்களே. அது உங்களுடைய உண்மையான தோற்றம் தானா" என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க.
இதற்கு பதிலளித்த விவேக் "அது தான் என்னுடைய உண்மையான லுக். அந்த மாதிரி திரையுலகில் துணிந்து நடிக்கிற நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தல அஜித்தும் தான்" என்று வெளிப்படையாக கூறினார்.

No comments: