இலங்கையில் தனிமைப்படுத்தலில் இருந்த 311 பேர் வெளியேற்றம்

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில் கடந்த 14 நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்களில் 311 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களுக்கு எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லை என்பது கண்டறியப்பட்டதையடுத்து இவர்களை தங்களின் குடுப்பங்களுடன் ஒன்றினைக்கும் பணியினை இன்று (செவ்வாய்க்கிழமை) இரானுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் பேருந்து மூலம் புனானை முகாமில் இருந்து மாத்தறைக்கும், கொழும்புக்கும், கண்டிக்குமாக இவர்கள் 9.50 மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கந்தக்காடு பகுதியில் இருந்து 108 பேர்கள் இராணுவத்தினரினால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments