இலங்கை உள்ளிட்ட 39 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது சவுதி

(CBC TAMIL - GULF) - கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து சவுதி அரேபியாவானது, அநேகமான ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கை உள்ளிட்ட 39 நாடுகளுக்கும் தற்காலிக பயணத்தடை விதித்துள்ளது.

ஏற்கனவே பயணத்தடை விதிக்கப்பட்ட அனேகமான ஐரோப்பிய நாடுகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சூடான், எதியோப்பியா, தென் சூடான், எரித்ரியா, கென்யா, ஜிபூட்டி, சோமாலியா உள்ளிட்ட நாடுகளுக்கே இப்பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்பயணத்தடையை இன்று (வியாழக்கிழமை) முதல் சவுதி அரேபியா விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நோய் காரணமாக சவுதி அரேபியாவில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் ஒருவர் குணமடைந்துள்ளார். நோய்த்தொற்றுக்கு உள்ளான ஏனையோர் அங்கீகரிக்கப்பட்ட முறையின்படி தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: