வவுனியா நேரியகுளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து.. பலர் காயம்..!!

(CBC TAMIL - VAVUNIYA) - வவுனியா செட்டிகுளம் நேரியகுளம் சந்தியில் இன்று (12) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரிய வருகையில் இன்று காலை 8 மணியளவில் செட்டிகுளத்தில் இருந்து வவுனியா நோக்கிசென்ற வவுனியா சாலைக்கு சொந்தமான அரச பேருந்து நேரியகுளம் சந்தியில் சென்றுகொண்டிருந்த போது கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அரச பேருந்து தூக்கி வீசப்பட்டதுடன் அதில் பயணித்த பலர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: