கொழும்பு மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கு மாகாணத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மார்ச் 24, காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். ஊரடங்கு உத்தரவு மார்ச் 27 வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்படும்.

ஏனைய 17 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விதிக்கப்பட்டு வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும். மேலதிக அறிவிப்பு வரும் வரை வியாழக்கிழமை நண்பகலில் அந்த 17 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் விதிக்கப்படும்.

Post a Comment

0 Comments