ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1754 பேர் இதுவரை அதிரடியாக கைது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1754 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை 447 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக விளையாட்டு மைதானங்களில், வாகனங்களில் பயணம் செய்தல், வர்த்தகத்தில் ஈடுபடுவது மற்றும் பொது இடங்களில் மது அருந்திய குற்றச்சாட்டுக்களில் சிலர் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பொலிஸார் ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து விதிமுறைகளையும் பின்னற்றவும் வீடுகளுக்குள் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments