மேலும் 04 பேருக்கு கொரோனா - 76 பேர் இதுவரை பாதிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இன்று காலை முதல் எந்தவொருநபரும் அடையாளம் காணப்படாத நிலையில் தற்போது மேலும் 04 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அனுராதபுரம் வைத்தியசாலையில் 4 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

No comments: