உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடில்லை - பிரதமர் மஹிந்த

உணவு பொருட்களுக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கும் எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்றி சந்தையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது செயலாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன்படி அத்தியாவசிய பொருட்களை சந்தைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சதொச நிறுவனம் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்று தொடர்ந்ததாகவும் இதேவேளை எவ்வித தட்டுப்பாடுகளும் இன்றி சந்தையில் எரிவாயுவை விநியோகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை லிட்ரோ காஸ் எடுத்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாவனையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு கையிருப்பு தம்மிடம் காணப்படுவதாக தெரிவித்துள்ள லிஸ்டரோ காஸ் நிறுவனம் நாடு முழுவதும் எரிவாயுவை விநியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைளை மேற்கொண்டுவருவதாக அந்நிறுவம் உறுதியளித்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: