எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

குறைந்தது ஒருவருடத்திற்கு எரிபொருளின் விலை அதிகரிக்கவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர்,"எரிபொருள் விலை சூத்திரங்கள் இல்லை எனவே உலக சந்தை விலையைப் பொருட்படுத்தாமல் 1 வருடத்திற்கு உள்ளூர் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை" என கூறினார்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சந்தையில் எரிபொருளின் விலை சரிந்துள்ள  நிலையில் அமைச்சர் இந்த அறிவிப்பே விடுத்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்துக்கு 200 பில்லியன் விலை உறுதித்தன்மை நிதியத்தை உருவாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 35 டொலருக்கும் குறைந்துள்ள நிலையில் இலங்கையின் புதிய அரசாங்கம் 2019 நவம்பரில் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்த விலை சூத்திரத்தையும் நிறுத்தியது.

No comments: