பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தேன் - டிக்டாக் இலக்கியா பரபரப்பு தகவல் !

ஸ்ரீரெட்டி பாணியில் தற்போது டிக்டாக் புகழ் இலக்கியா என்பவரும் பட வாய்ப்புக்காக படுக்கையை ஒரு சில இயக்குனர்களிடம் பகிர்ந்ததாகவும், ஆனால் தன்னை அவர்கள் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியபோது ’டிக்டாக் புகழை வைத்து திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டதாகவும், ஆனால் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர வேண்டும் என்று ஒருசில இயக்குனர்கள் நிபந்தனை விதித்ததாகவும், சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்ற ஆசையால் நானும் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஒப்புக்கொண்டதாகவும், அதன் பின்னர் அவர்கள் தனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் இலக்கியா கூறியுள்ளார்.

சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசையால் படுக்கையை பகிரும் பெண்களை தயவுசெய்து ஏமாற்றாதீர்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலக்கியாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக படுக்கையை பகிர்ந்ததாகவும், ஆனால் தன்னை பல இயக்குனர்கள் மற்றும் பெரிய நடிகர்கள் ஏமாற்றி விட்டதாகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: