வாகனங்களின் விலை அதிகரிப்பு...! கார்களின் விலை உயரக்கூடும்..!

(THINA SEITHI - COLOMBO) - ஜப்பானில் தயாரிக்கப்படும் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாய்க்கு நிகரான ஜப்பானிய யென் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பீரிஸ் அறிவித்தார். 

அந்தவகையில்,
  • சுசுகி வேகன் ஆர் - 170,000 ரூபாய் 
  • டொயோட்டா விட்ஸ்- 240,000 ரூபாய்
  • டொயோட்டா ஆக்சியோ- 375,000 ரூபாய் 
  • ஆக்ஸியோ கார் - 375,000 ரூபாய்
  • பாசோ கார் - 160,000 ரூபாய்
  • ஹோண்டா வெசெல் - 400,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல கார்களின் விலை உயரக்கூடும் என்றும் அவர் கூறினார்.

No comments: