இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா? அவசரமாக வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண்!

(THINA SEITHI - COLOMBO) - கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ள 56 வயதுடைய பெண்ணொருவர் சிலாபம் வைத்தியசாலையில் இருந்து ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இந்தமாதம் 3 ம் திகதி இத்தாலி ரோம் நகரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்தார் என்றும் அவர் நேற்றைய தினமே சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

இருப்பினும் குறித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது தொடர்பான மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: