வெந்நீரூற்று கிணறு பிரதேசம் தற்காலிகமாக மூடப்படுகின்றது

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலையில் அமைந்துள்ள வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று (15) முதல் மறு அறிவித்தல் வரும்வரை வெந்நீரூற்று கிணறு சுற்றாடல் பகுதி  மூடப்படும் என திருகோணமலை மாவட்ட தொல்பொருள் அதிகாரி மொஹான் ஆரியதிலக தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிலாவெளியில் உள்ள பறவைகள் தீவும் நேற்று முதல் 2 வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வன ஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் கீர்த்தி சந்திர ரத்ன தெரிவித்துள்ளார்.

No comments: