மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் பாடல் எப்போது வருகிறது தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் நாளை மாலை 5 மணிக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.


" மாஸ்டர் "தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. ஏனெனில் விஜய் முதன் முறையாக சென்சேஷன் இயக்குனர் லோகேஷுடன் கைக்கோர்த்துள்ளது ஒரு காரணம் என்பதனால் .

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் நாளை வெளிவரவுள்ளதாம், ஆம், நாளை மாலை 5 மணிக்கு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பாடல் ‘வாத்தீகமிங்’ (vaathi coming ) என்று தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments