புது அவதாரம் ஆச்சர்யாவில் ரெஜினாவின் நடனம்...

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட சுமார் 30 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை ரெஜினா கேசான்றா இருப்பினும் இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்திகேயனுக்கு கதாநாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது (கள்ளபார்ட்) , (கசடதபற) ஆகிய படங்களில் நாயகியாக நடித்துக்கொண்டிருப்பதும் (சூர்ப்பனகை) என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
  இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் (ஆச்சார்யா)எனும் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட ரெஜினா ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நடனக் காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் சிரஞ்சீவியுடன் நடனமாடியது தனக்கு சிறப்பான அனுபவம் என்றும் ரெஜினா கூறியுள்ளார் .

 மேலும் குத்தாட்ட டான்ஸ் கிடையாது என்றும் இது ஒரு திருவிழா பாடல் என்றும் இந்தப் பாடலில் சிரஞ்சீவியுடன் நடனமாடும் வாய்ப்பை இழக்க விரும்பாததால் இந்த பாடலில் நடனமாட சம்மதித்ததாகவும் அவர் கூறிஉள்ளார் . ஆனால் அதே நேரத்தில் தொடர்ந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

 சிரஞ்சீவி நடிப்பில் கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகிவரும் (ஆச்சாரியா) படம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகி வருகிறது என அறியப்படுகிறது.

No comments: