தற்போதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் யாழில் அடையாளம் காணப்படவில்லை

தற்போது கொரோனா COVID - 19 தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்வரும் நாட்களில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எமது பகுதியில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ஆகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகத்திற்குள்ளானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது என கூறினார்.

ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என்றும் வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழில் இதுவரை 32 பேர், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவருக்கே யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments