மீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு அமுல்!

புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக இன்று காலை 8 மணிக்கு நீக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிகழ்வுகளை தடையின்றி மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

புத்தளம், , சிலாபம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: