கொரோனா வைரஸ் - 88 ரயில் சேவைகள் இரத்து!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

2 வாரங்களுக்கு விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அரசாங்கத்தினால் விசேட விடுமுறை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் சில ரயில் சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை, பிரதான ரயில் மார்க்கத்தின் 34 ரயில் சேவைகள் உட்பட 88 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளன.

இதேநேரம், ரயில் போக்குவரத்திற்கான பயணச்சீட்டு விநியோகம் மற்றும் பொதிகளை ஏற்றுக் கொள்ளுதல் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

No comments: