கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் இலக்கம் 1090, ஸ்ரீ ஜயவர்தனபுர, ராஜகிரிய எனும் முகவரியில் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனை உறுதி செய்வதற்காகவும் பொது சுகாதாரம் மற்றும் ஏனைய சேவைகளை சிறப்பான ஒருங்கிணைப்புடன் மேற்கொள்வதையும் உறுதி செய்யும் நோக்குடனும் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் கீழ் முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைப்பதற்காக சேவை அவசியத்தின் முக்கியத்துவத்திற்கேற்ப அனைத்து அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்படுவதோடு அதற்காக அவர்கள் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.