முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சூரரைப் போற்று படக்குழு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும்  சூரரைப் போற்று படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. (சிபிசி தமிழ்- cbc tamil ) சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’ இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படத்தின்  நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மற்றும் , மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து தற்போது முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் மாறா தீம் மற்றும் வெய்யோன் சில்லி ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்த பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

மண்ணுருண்ட என தொடங்கும் அந்த குத்துப்பாடலை பிரபல பாடகர் செந்தில் கணேஷ் பாடியுள்ளார். பாடலாசிரியர் ஏகாதசி இப்பாடலை எழுதியுள்ளார்.

No comments: