விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை இம்மாதம் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.(சிபிசி தமிழ்- cbc tamil) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படம் அடுத்த மாதம் வெளியாகிறது.இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த மாதம் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

 ஆனால் கடந்த படங்களை போல் இல்லாமல், இந்த விழாவை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனராம் படக்குழுவினர் அதன்படி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விழா நடைபெற உள்ளது.

இதில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லையாம். விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த முக்கியமான நிர்வாகிகள் சிலருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரியவருகிறது . இந்த விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசுவதை கேட்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். சர்க்கார், பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் கலந்து பேசிய விஜய்யின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது .

ஐ.டி ரெய்ட், சிஏஏ போராட்டம் என பல பிரச்சினைகள் இருப்பதால் இம்முறை அவர் என்ன பேசப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். எனவே மாஸ்டர் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: