கொரோனா எதிரொலி - பொதுத்தேர்தலினை ஒத்திவைக்ககோரும் கூட்டமைப்பு.... !

நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் பரவுகின்ற அச்சம் சம்பந்தமாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை உடனானடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்க அக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு முற்றுமுழுதான ஆதரவினை வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

மக்களுடைய பாதுகாப்பிற்கு அதியுச்ச கரிசனை வழங்கப்பட வேண்டும் என்பதனாலும் இவ் அசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாக செயற்படுத்த முடியாத காரணத்தினாலும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பொது தேர்தலை பிற்போடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: