சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வது தொடர்பான அனைத்து சேவைகளும் மார்ச் 31 ஆம் திகதி வரை நிறுத்திவைக்கப்பட்டது என போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கல், பரீட்சை, வாகனம் செலுத்தும் செயல்முறைத் தேர்வு உள்பட அனைத்து சேவைகளும் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் நிலவும் நிலையில் போக்குவரத்து திணைக்களம் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

No comments: