கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 - ஐ எட்டியது

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் 03 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இதேவேளை வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய சந்தேகத்தில் 229 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கிய சீன பெண் மற்றும் முதலாவது இலங்கை பிரஜையான சுற்றுலா வழிகாட்டு ஆகியோர் முழுமையாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments