கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - அமெரிக்காவில் அவசர நிலையை அறிவித்தார் ட்ரம்ப்!

(CBC TAMIL -WORLD) - உலகினையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், "நான் அதிகாரப்பூர்வமாக தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்கிறேன். 

மேலும் 50 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த 8 வாரங்கள் வைரஸை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான தருணங்களாகும்" என்றார்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது.

உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments