தொடரும் பதற்றம் - இலங்கையில் 5 பேருக்கு கொரோனா...!

Three more cases of Coronavirus confirmed in Sri Lanka
(CBC TAMIL - COLOMBO) - இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நேற்றைய தினம் மூவர் புதிதாக கண்டறியப்பட்டதாகவும் குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய 2 நோயாளர்களும் கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனதாக சந்தேகிக்கப்படும் 64 பேர் இலங்கையில் பல பகுதிகளில் சில வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: