(CBC TAMIL - WROLD NEWS) - கொரோனா வைரஸ் குறித்த மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை அவரிற்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது எனவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை என்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள் என்றும் நேற்று (சனிக்கிழமை) வெள்ளை மாளிகைக்குள் தான் நுழைவதற்கு முன்னரும் பரிசோதனைகளை மேற்கொண்டனர் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் குறித்த விபரங்களை ஆய்வுகூடத்திற்கு அனுப்பியுள்ளனர் எனவும் ஊடகங்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்துவதன் காரணமாகவே தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பினை அடிப்படையாக வைத்தே இந்த முடிவிற்கு வந்ததாகவும் நீங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவில்லையா என பலர் என்னிடம் செய்தியாளர் மாநாட்டில் கேட்டனர் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
0 Comments