கொரோனாவை கட்டுப்படுத்த பிரித்தானியாவிற்கான விமான சேவைகளை மட்டுப்படுத்தும் அமெரிக்கா!

விமான சேவைகளை குறைப்பதன் மூலம்  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என்பதனால் பிரித்தானியாவிற்கு சேவைகளை மேற்கொள்ளும் விமானங்களை குறைக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் கோ நேற்று (14) தீர்மானம் எடுத்துள்ளது. 

இதேவேளை டெல்டா ஏர்லைன்ஸ் இன்க் பிரித்தானியாவிற்கான விமானங்களை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இன்னும் முழு கால அட்டவணையை பறக்கும் சில அமெரிக்க விமான நிறுவனங்களில் ஒன்றான குறித்த விமான சேவை நிறுவனம் தென்மேற்கிற்க்கான விமானங்களை குறைப்பதை “தீவிரமாக பரிசீலித்து வருவதாக” கூறியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து மீதான கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை நள்ளிரவில் இருந்து அமுலுக்கு வரும் என்றும் இது அமெரிக்க அல்லாத பெரும்பாலான மக்கள் கடந்த 14 நாட்களுக்குள் அந்த நாடுகளில் இருந்த அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியுள்ளார்.

No comments: