முறையாக வரி செலுத்திய விஜய் ..!!

தளபதி விஜய் பகில் மற்றும்  மாஸ்டர் படத்துக்கான வரியை முறையாக செலுத்தியுள்ளார். 


( தின செய்தி -  cbc tamil) நடிகர் விஜய் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த பரபரப்பு அடங்கிய சில வாரங்களில் மீண்டும் விஜய் வீட்டில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதோடு கடந்த மாதம் விஜய் வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது இரண்டு அறைகளில் சீல் வைக்கப்பட்டிருந்தது. அதை இப்போது அகற்றியிருக்கிறார்களாம்.

மேலும், இந்த ரெய்டுக்குப்பிறகு நடிகர் விஜய் பிகில் மற்றும் மாஸ்டர் படங்களுக்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவலையும் வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் பிகில் படத்திற்கு ரூ. 50 கோடியும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடியும் சம்பளம் வாங்கியுள்ள விஜய், அதற்கான வருமான வரியை சரியாக செலுத்தி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: