தல அஜித் பற்றி பேசிய தளபதி விஜய் !!!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விஜய் அதில் அஜித் பெயரை குறிப்பிட்டிருந்தார். 


(சிபிசி தமிழ்-cbc tamil ) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. மீடியாவிலிருந்து யாருக்கும் அழைப்பு இல்லை.

படக்குழுவினரும், அவர்களது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கு கோட், சூட் போட்டு வந்திருந்தார் விஜய். அது பற்றி பேசும் போது, நண்பர் அஜித் போல, கோட் சூட் போட்டு வர வேண்டும் என்று நினைத்து இப்படி வந்தேன் என்றார்.

அவரது பேச்சில் 'நண்பர் அஜித்' என்பது பாசமாகக் குறிப்பிடப்பட்டாலும், அஜித் எப்போதுமே கோட், சூட்டுடன் தான் வருவார் என்ற கிண்டல் தொனியும் இருந்தது மறுப்பதற்கில்லை.அஜித் பொதுவாக பொது விழாக்கள் எதிலும் கலந்து கொண்டதேயில்லை. அப்படி அவர் கலந்து கொண்ட விழாவெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. அப்படியிருக்கையில் விஜய், கோட் சூட், நண்பர் அஜித் எனப் பேசியது நேற்றைய விழாவில் பொருத்தமாக அமையவில்லை.

No comments: