கொரோனாவை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - மங்கள

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய சார்பாக வேட்புமனுவை தாக்கல் செய்து கருத்து தெரிவித்தபோதே அவர் .மேற்கண்டவாறு கூறினார்.

கொரோனா வைரஸ் ஒரு அரசியல் கட்சி அல்லது ஒரு சமூகத்தைமட்டும் தக்கது என சுட்டிக்காட்டிய அவர், அரசியல் இன மத பேதமின்றி அனைவரும்  செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

No comments: