ஆபாச இணையதளத்தில் வெளியானது மீராமிதுன் புகைப்படம்...!

தனது புகைப்படம் மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று நடிகை மீரா மிதுன் கேள்வி எழுப்பி உள்ளார்.

'பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் அந்த நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சரி, சர்ச்சைக்குரியவராக காணப்பட்டார். அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீராமிதுனின் புகைப்படம் ஒன்றை மார்பிங் செய்து ஆபாசமாக ஆபாச இணையதளத்தில் மர்ம நபர்கள் சிலர் பதிவு செய்து உள்ளார்கள். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் செய்துள்ளதாகவும் ஆனால் சைபர் கிரைம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மீராமிதுன் குற்றம்சாட்டியுள்ளார். 

மீராமிதுனின் இந்த குற்றச்சாட்டை அடுத்து சைபர் கிரைம் அதிரடியாக நடவடிக்கை எடுத்து மீராமிதுனின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவு செய்த வரை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: