கடுமையான சட்டங்களை அமுல்படுத்தியது அவுஸ்ரேலிய அரசு!

(MELBOURNE - CBC TAMIL ) - கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக முக்கிய இடங்களை மூடுவதற்கும் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை ஏற்படுத்த மக்கள் வீடுகளில் இருக்குமாறும் இதனை மீறினால் கடுமையான நடவடிக்கையுடன் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் இன்று (28) அவுஸ்ரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு வயதான பெண் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்ததுள்ளது. இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அம மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்று அதிகாலை வரையிலான நிலவரப்படி 212 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் குறித்த வைரஸ் தாக்கத்தினால் 3,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் நோய்த்தொற்று விகிதம் மற்ற பல நாடுகளை விட குறைவாகவே உள்ளது, இருப்பினும் குறிப்பாக நாட்டின் 25.5 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களில் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் சனிக்கிழமை நிலவரப்படி, வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் அனைத்து பிரஜைகளும் அரசாங்கத்தின் செலவில் இரண்டு வாரங்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments