கொரோனா வைரஸ்: இத்தாலியில் ஒரு நாளில் 900 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இத்தாலியில் நேற்று (27) பதிவாகியுள்ள நிலையில் அங்கு 919 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக 9 ஆயிரத்து 134 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தமாக 86 ஆயிரத்து 498 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஸ்பெயினில் நேற்று மட்டும் 773 உயிரிழப்பு பதிவாகி மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது. அங்கு நேற்று 7 ஆயிரத்து 933 பேர் புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டு மொத்தமாக 65 ஆயிரத்து 719 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

இதையடுத்து, பிரான்ஸிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அங்கு நேற்று மட்டும் 299 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, ஈரானிலும் தொடர்ந்து நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்ற நிலையில நேற்று மட்டும் 144 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 378ஆக பதிவாகியுள்ளது.

மேலும், நெதர்லாந்தில் 112 பேரும், சுவிற்சர்லாந்தில் 39 பேரும், ஜேர்மனியில் 84 பேரும் பெல்ஜியத்தில் 69 பேரும் நேற்று ஒரேநாளில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஆசிய நாடுகளில் ஓரளவுக்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பரவலால் கணிசமான உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றது.

Post a Comment

0 Comments