கொரோனா அச்சுறுத்தல் - கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படவில்லை!

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அரசாங்கம் மூடுவதாக வெளியான வதந்திகள் எவ்வித உண்மையும் இல்லை என சிவில் விமான போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

தற்போது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மட்டுமே மூடப்பட்டுள்ளது மற்றும் எதிர்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையமும் மூடப்படும் என்ற அனைத்து வதந்திகளையும் அதன் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நிராகரித்துள்ளார்.

அத்தோடு இவ்வாறு சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்களால் பொது மக்களை ஏமாற வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

No comments: