துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய மற்றுமொரு கைதியும் உயிரிழப்பு..!

(CBC TAMIL - ANURADHAPURA) - அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலைமையினை அடுத்து இடம்பெற்ற வன்முறையில் மற்றுமொரு கைதி உயிரிழந்த நிலையில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது.

சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போதே குறித்த இரு கைதிதகளும் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது ஒரு கைதி உயிரிழந்த நிலையில் மற்றைய கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காயமடைந்த 3 பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார்.

சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா அச்சத்தை அடுத்து இடம்பெற்ற போராட்டம், குழப்பமாக மாறியுள்ளதாகவும் இதன்போது தப்பியோட முற்பட்டவர்கள் மீது சிறைக் காவலர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

No comments: