யாழில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவரின் இல்லத்தில் கிருமி நீக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் தாவடி பகுதியில் உள்ள வீடு மற்றும் அவர் சென்றுவந்த இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை இன்று (23) மேற்கொள்ளப்பட்டது

குறித்த நபர் செம்மணி தேவாலயத்தில் விசேட ஆராதனையில் கலந்துகொள்வதற்காக வந்த சுவிஸ் நாட்டு போதகர் ஒருவருடன் பழகிய நிலையில் வருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கிருமி தொற்றை தடுக்கும் கவச ஆடைகளுடன் குறித்தபகுதிக்கு வந்த பொலிஸார், இராணுவம் ஆகியவற்றின் பாதுகாப்புடன் குறித்த நபருடைய வீடு, அருகில் உள்ள கோவில்கள், மற்றும் வா்த்தக நிலையங்கள், அயலில் உள்ள வீடுகள் போன்றவற்றில் இந்த தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments